NRTIA ஜப்பான் பொறுப்பாளர்கள் மூலம், ஜப்பான் வாழ் தமிழர்கள் வழங்கிய கொரோனா நிவாரண நிதி பத்திரமாக தமிழ்நாடு முதலமைச்சர் நிதியில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து நிதியளித்தவர் விவரம் மற்றும் ரசீதுகள் தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களிடம், மன்னார்குடி தொகுதி MLA டி.ஆர்.பி. ராஜா அவர்கள் மூலம் கையளிக்கப்பட்டது.



ஜப்பானில் குன்மா மாகாணத்தில் வசிக்கும் தமிழர் திரு. குணசேகரன் அவர்களின் மருத்துவம் மற்றும் பணியிடம் தொடர்பான சிக்கல்களைக் களைய NRTIA ஜப்பான் பொறுப்பாளர்கள் உதவினர். கடந்த நவம்பர்-2021ல் காசநோயால் பாதிக்கப்பட்டபோது மருத்துவமனையில் அனுமதிக்க உதவியது முதல் சிகிச்சைக்குப் பின்னான ஓய்வுக் காலத்தில் பணியிடத்திலும் வசிப்பிடத்திலும் ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்க்க உதவினர். தற்போது மீண்டும் பணியில் இணைந்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.



NRTIA ஜப்பான் பொறுப்பாளர்கள் மூலம், சென்னை மீனம்பாக்கம் ஆதி திராவிடர் நலப்பள்ளி அரசு பொதுதேர்வு எழுத போகும் மாணவ மாணவியருக்கு தேர்வு காலம் முழுவதும் ( ஏப்ரல், மே) தினமும் மாலை சிற்றுண்டி, உணவு உதவி வழங்கப்பட்டது