கணிணித்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை,தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்றவற்றில் பணிபுரியும் தமிழர்கள் விசா மற்றும் ஊதியச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்காக நிறுவனர்களிடம் பேசித் தீர்வைக் கண்டறிதல்
குழந்தைப் பருவத்தை ஜப்பானில் கழிக்கும் குழந்தைகளுக்குத் தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலைகளுடனான தொடர்பும் ஆர்வமும் குறைவாக இருப்பதில் பல பெற்றோர்கள் கவலைகொள்கின்றனர்.
அவர்களுக்காக ஜப்பானில் இருக்கும் அனைத்துத் தமிழ்ச் சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்
ஜப்பானியக் காவல்துறையால் விசாரணை அல்லது சிறைப்பிடிப்புக்கு ஆட்படும்போது மொழிச்சிக்கல் இல்லாமல் உரையாட உதவித் தவறான நடவடிக்கை அல்லது தண்டனையைத் தவிர்த்தல்
நாம் உடனில்லாத நிலையில் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்க்குச் சமூகப் பாதுகாப்பு குறையும்போது வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறைமூலம் தக்க நேரத்தில் உதவிகள் கிடைக்கச் செய்தல்
அரசு ஆணை எண்.1141, பொது (ம.வா-1) துறை, நாள் 13.12.2010, படி சென்னையில் உள்ள மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தில் வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன்காக்கத் தனியாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு இந்த ஆணையரகத்தின் பெயர் "மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு 13.12.2010 முதல் இயங்கி வருகிறது.